வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Sunday, June 7, 2009

பாகம்-2

இருக்கிறது என்றிருந்து ஏமாறும் இன்னலினும்
இல்லை என்றிருத்தல் நலமாம்.
___________________________________________________________

களவாடும் கள்வர் கூட்டம் கைதொழுதிடும்
காரியம் கூடியதும் கழுத்தறுக்க.
___________________________________________________________

பலமுடன் பலநாள் இருந்தாலும் பழுதானால்
பல்லை பிடுங்கத்தான் வேண்டும்.
___________________________________________________________

உண்மையும் நேர்மையும் உறவாடும் உத்தமரை
பிழைக்க தெரியதவரெனும் உலகு.
___________________________________________________________

விழுதலும் வீழ்தலும் வேறுப் பட்டாலும்
எழுதல் என்றும் உன்கையில்.
___________________________________________________________

கனியாத கனியும் பணியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது.
___________________________________________________________

இன்பம் இனிக்கும் வேளை பரவசபடு
இடுக்கண் கண்டு பக்குவபடு.
___________________________________________________________

நிறை நிறைந்திருக்க குறை மட்டும்
காணின் நிறை குறைந்திடும்.
___________________________________________________________

உணர்வுள்ள (நல்)உள்ளங்கள் ஊமையானதல் இங்கே
ஊழல்கள் உத்தமமாய் உலவுகின்றன.
___________________________________________________________

கள்ளமில்லா கல்லார் கூட்டம் கற்றுணர்ந்த
கள்வர் கூட்டதினும் மேல்.
___________________________________________________________

No comments:

Post a Comment