வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Sunday, June 7, 2009

பாகம்-3

பிரிதல் கூட்டும் புரிதல் அதுபோல்
நல்லறிதல் கூட்டும் காதல்.
___________________________________________________________

வீழ்ந்து மடிவதில்லை விதைகள் வீறிட்டு
எழுந்திடும் வானுயர் விருட்சமாய்.
___________________________________________________________

அழுகை ஆனந்தமோ அயர்ச்சியோ ஆற்றாமையோ
அதனாழம் அழுவாரே அறிவார் .
___________________________________________________________

தவறும் சரியாகும் முதலாளியெனில் மாறாக
சரியும் தவறாகும் தொழிலாளியிடத்து.
___________________________________________________________

பாசப்பேச்சோ ஏச்சுப்பேச்சோ பொருளில்லை எனில்
பேச்சால் ஏதும் பயனில்லை.
___________________________________________________________

தெருவிலிருந்து தேரோ தேரிலிருந்து தெருவோயென
தீர்மானிக்கும் தருணம் திருமணம்.
___________________________________________________________

சுடு சொற்கள் சொலல் சுலபமாம்
சிரமமாம் சொல்லியன அள்ளல்.
___________________________________________________________

தெளிந்த நீராயினும் நிறமாறித் தெரியும்
கருந்திரை கண்கொண்டு கண்டால்.
___________________________________________________________

சுகமாய் சுமந்தவை சுமையாய் ஆனாலும்
சுமத்தலே சுகமென கொள்.
___________________________________________________________

மறுமை மறக்கவைக்கும் எளிமை எடுத்துரைக்கும்
வெறுமை விரும்பவைக்கும் வறுமை.
___________________________________________________________

No comments:

Post a Comment