பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->

Tuesday, June 23, 2009
பாகம்-4
நல்லதை செய்த உடனே மறந்துவிடு
கெட்டதை மறந்தும் செய்துவிடாதே.
___________________________________________________________
எண்ணத்தில் ஏமாற்று எண்ணம் கீழிறங்க
சுற்றத்தில் சந்தோசம் மேலோங்கும்.
___________________________________________________________
திமிராகி தனியாகி துயராகி வாழ்வில்
தோல்வியுறச் செய்யும் தற்பெருமை .
___________________________________________________________
தீதெது நன்றெது என தெளிந்தறிதல்
திடமான தீர்வுக்கான தேர்வாம்.
___________________________________________________________
வீதியில் (வாழ்வில்) சில விபத்தை கண்டு
ஊர்தியை (உழைப்பை) தவிர்ப்பது மடமையாம்.
___________________________________________________________
காரியத்தில் வீரியம் இருந்தால் காணும்
கஷ்டங்களும் இஷ்டமாய் கனியும்.
___________________________________________________________
தூற்றலால் துவளாமையும் போற்றலால் தற்பெருமையும்
தீண்டா வாழ்வே தெளிவுறும்.
___________________________________________________________
நிம்மதி என்பது விண்ணிலில்லை நினைத்து
நிகழ்தும் நின்மதியின் எல்லை.
___________________________________________________________
உண்மைகள் உறங்கும் இறக்காது - பொய்கள்
உண்மையென உலவும் நிலைக்காது.
___________________________________________________________
கனியான பின்னாலும் இனிவில்லை எனில்
தரமில்லை என்றே தள்ளிவைப்பர்.
___________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment