வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Monday, August 17, 2009

பாகம்-7

இரை குறை கண்டு இறைமாறும்
இனம் இறை காணா.
___________________________________________________________

அறிவும் செறிவும் ஒளிரும் உள்ளம்
பணிந்து கனிந்து மிளிரும்.
___________________________________________________________

மலராய் மலர்வாய் கனியாய் கனிவாய்
அன்பே அணியாய் அணிவாய்.
___________________________________________________________

மகிழ்ந்து மகிழ்தலினும் மகிழ்வித்து மகிழும்
மனமே மனமாற மகிழ்வுறும்.
___________________________________________________________

துடுப்பு இல்லா படகு போன்றது
பிடிப்பு இல்லா படிப்பு.
___________________________________________________________

புறத்தோற்றம் பார்த்து பிரிவினை போற்றாது
அகத்தோற்றம் பகுத்து பழகு.
___________________________________________________________

செய்யும் செயல் சரியாவதும் தவறாவதும்
சுற்றத்தின் சிந்தை வெளிப்பாடே.
___________________________________________________________

நீ காணாததை உன் பிள்ளைக்காண
நீ கண்டதை காணாதாக்காதே.
___________________________________________________________

குறைகூறல் குறைய குணம் கூடும்
காணும் கவலை கலைந்தோடும்.
___________________________________________________________

செல்வந்தராக செல்வம் சேர்த்தல் ஒருவழி
செலவு சிறுத்தல் மறுவழி.
___________________________________________________________

1 comment:

Anonymous said...

awesome!!! k...:-) suvai

Post a Comment