வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, October 31, 2009

பாகம்-9

மருந்தாய் மிடுக்காய் மதிப்பாய் மிளிர்வாள்
மருமகளாகி மாமியாரானதை மறவாதவள்.
__________________________________________________________

விந்தை விளக்க சிந்தை செழிக்க
விழியாகி வழியாவான் தந்தை.
___________________________________________________________

அறிவை அருளாய் அன்பை அமுதாய்
அறமாய் அளிப்பவள் அன்னை.
___________________________________________________________

இல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்
இருக்கும் இன்பம் இல்லாதாகும்.
___________________________________________________________

அடிமை வாழ்வின் செழுமையினும் சுதந்திர
வாழ்வின் வறுமை உயர்ந்தது.
___________________________________________________________

இன்பம் பெருக்கி துன்பம் வகுக்கும்
தன்னலம் இல்லா நல்லுறவு.
___________________________________________________________

எளியோரை வலியோராக்கி இன்னல் நீக்கி
பேரின்பம் பகரும் பக்தி.
___________________________________________________________

எதனை இழந்தாலும் என்றும் உயிர்த்திடும்
எதிர்பார்ப்பு இல்லா அன்பு.
___________________________________________________________

குயவரால் களிமண்ணும் கலையாகும் நல்
குருவால் அறிவிலிகளும் அறிஞராவர்.
___________________________________________________________

முயற்சி முதலில் தோல்வி தொட்டாலும்
வெற்றிக்கு வித்திடும் விடாமுயற்சி.
___________________________________________________________

No comments:

Post a Comment