வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Friday, July 24, 2009

பாகம்-6நம்பிய நம்பிக்கை நமக்கு நம்பும்கை
நம்பாத நடவடிக்கை மூடநம்பிக்கை.
___________________________________________________________

அலர்தல் ஆவேசம் ஆத்திரம் இல்லா
ஆற்றலுள்ள அனுபவமே அறிவு.
அலர்தல் - புறங்கூறல்

___________________________________________________________

புகை புகைத்து உடற்பகை போற்றாது
புகை பகைத்து பழகு.
___________________________________________________________

தடுமாறும் நிலையதில் தாங்கிட தோளில்லையெனில்
தன்கையே தனக்கு உதவி.
___________________________________________________________

வாழ்வில் வரும்வலி வலுவின் விளிவு
வீழாவன்மை வேதனையின் விடிவு.
(விளிவு=கேடு வீழா+வன்மை= தளரா வல்லமை)
___________________________________________________________

விடையறியா விடயங்களுக்கு விடையில்லை எனல்
விழியில்லார் விடியலில்லை என்பதுபோல்.
___________________________________________________________

எதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்
எளிதாய்விளங்கும் இருபுற உண்மை .
___________________________________________________________

இயற்கைக்கு இன்னல் செய்யீர் இல்லேல்
இயற்கை நம்மை இல்லாதாக்கும்.
___________________________________________________________

ருசிக்க புசிக்காமல் பசித்து புசித்தல்
ருசித்து ரசிக்க வைக்கும்.
___________________________________________________________

கொண்ட கருமத்தை கண்ணாய் கண்டிட
குழப்பங்கள் குன்றி கலைந்தோடும்.
___________________________________________________________

2 comments:

வால்பையன் said...

இயற்கைக்கு இன்னல் செய்யீர் இல்லேல்
இயற்கை நம்மை இல்லாதாக்கும்.

ருசிக்க புசிக்காமல் பசித்து புசித்தல்
ருசித்து ரசிக்க வைக்கும். //

ரெண்டுமே செம டச்சிங் தல!

சப்ராஸ் அபூ பக்கர் said...

////ருசிக்க புசிக்காமல் பசித்து புசித்தல்
ருசித்து ரசிக்க வைக்கும். ////

நல்லா இருந்திச்சு.....

Post a Comment