வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, September 4, 2010

பாகம் -14

அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்.
__________________________________________________________

வீழ்ந்தே வாழ்வினும் தாழ்ந்து வாழ்வதில்லை
எழுச்சியுடன் விழும் நீர்வீழ்ச்சி.
__________________________________________________________

ஆலம் விழுது விழுவது வீழ்வதற்கல்ல
பலமுடன் பலநாள் வாழ்வதற்கு.
__________________________________________________________

வீழ்ந்தாலும் வெகுண்டு எழுதலே வாழ்வின்
விடியலுக்கு வித்திடும் விதை.
__________________________________________________________

ஊசியால் தினம்தினம் உருகுலைவதினும் வாள்
வீசி வீழ்வது மேல்.
__________________________________________________________

எதிர்பார்ப்பில்லா அன்பென்பது இல்லை ஏனெனில்
எதிர்பார்ப்பின் அது அன்பில்லை.
__________________________________________________________

பொருட்செல்வம் தேடி அருட்செல்வம் தொலைத்து
உடமையின் அடிமையாதல் மடமை.
__________________________________________________________

எதிலும் எதிர்பார்த்து ஏங்கும் உறவு
என்றும் இணையா பிளவு.
__________________________________________________________

பெற்ற பிறந்த பெற பிணைந்த
உறவில் மட்டுமே உரிமை.
__________________________________________________________

மும்மையெண்ணி முடங்காது மறுமையெண்ணி மருளாது
இம்மையை ஏற்றலே நன்மை.

1 comment:

Sweatha Sanjana said...

அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

Post a Comment