Note:Kirukkural மட்டுமே Thirukkural அல்ல
தொழில் உனக்கு தெய்வமானால் தெய்வம்
உனக்கு தோழன் ஆவான்.
___________________________________________________________
சிதைந்த சீப்பினால் சிக்கெடுத்தால் சிரமம்
சீப்பிற்கு அல்ல சிகைக்குத்தான்.
___________________________________________________________
(NOT having) (not using) (not being)
இல்லாமல் இல்லாமல் இல்லாமல்-இருந்தும்
இல்லாமல் இருப்பதே எளிமையாம்.
___________________________________________________________
குடிபோதையில் நின் வழி - உன்
குடிவீழ வெட்டும் குழி.
___________________________________________________________
ஏறும்போது இறங்குவதும் இறங்கும்போது ஏறுவதும்
பங்குசந்தைக்கும் ரத்தக்கொதிபிற்கான உறவு.
___________________________________________________________
துன்பத்தால் துவளாமல் துன்பத்தை துன்புறுத்தல்
துயர் துடைக்கும் திறனாம்.
___________________________________________________________
அணுவை அணுஅணுவாய் ஆராய்ந்தாலும் - அணுவால்
அமைதியைவிட ஆபத்தே அதிகம்.
___________________________________________________________
சினங்கொண்டு சீறுமுன் சிறிதேனும் சிந்தித்தால்
சீறிய சிரமமும் சிறிதாகும்.
___________________________________________________________
நீருற்றி நெடுவயல் நட்டாலும் நெற்மணி
கிட்டாது நட்டது புல்லென்றால்.
___________________________________________________________
காணாத காட்சியெல்லாம் கண்முன்னே நடந்தாலும்
கண்டுகளிக்க இயலாது கண்மூடியிருந்தால்
___________________________________________________________
3 comments:
Hi K....:-)
Just read all the ones I missed....keep up yr good work....hope u can publish yr "kirukals" someday.....good luck....ipadiku....suvai :-)
இதுவே.... கிறுக்கியதா,அப்ப நல்லா எழுதினா....வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பரே...வரவுக்கும் வாழ்த்துக்கும்...
Post a Comment