பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
Thursday, July 2, 2009
பாகம்-5
பிறப்பால் பெரும்பேறு பெறுவதில்லை யாரும்
இருப்பால் இருவினைச் சேரும்.
___________________________________________________________
முதிர்ச்சியை கூட்டும் முன்யோசனை மாறாய்
முட்டாள் ஆக்கும் பின்யோசனை.
___________________________________________________________
பிடித்தப்பிடியில் பலனில்லை என்றாலும் பித்தராய்
பிடிக்க வைக்கும் பிடிவாதம்.
___________________________________________________________
உன் உடமை கண்டு உறவாடும்
உறவு உப்பற்ற உணவு.
___________________________________________________________
சும்மா இருத்தல் சுகம் எதுவரையெனில்
சும்மா இருத்தல் சுமையாகும்வரை.
___________________________________________________________
உயிர்வலி உன்னுள் உணர்த்தும் உண்மை
உணரவேயன்றி உரைத்திடல் ஆகாது.
___________________________________________________________
உளமாற பாராட்டும் உள்ளங்கள் உள்ளவரை
வளமோடு வாழும் கலை.
___________________________________________________________
நடுநிலை நழுவாது நன்றும் தீதும்
நயம்பட நவிலும் நட்பு.
___________________________________________________________
இல்லதில் இல்லாள் இனியவளாய் இருந்திட்டால்
இல்லறம் இனித்திடும் இன்பத்தில்.
___________________________________________________________
இலக்கணமாய் இருந்துக்காட்டி அன்பால் இளையோரை
வழிநடத்தல் சான்றோர் செயல்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Hi K....:-)
superb quotes both about the ilatharasi & the saandror.
I am able to post comments now ;-)
எல்லாமே சூப்பரா இருக்குங்க! இதுக்குப் போய் கிறுக்குறள்னு பேர் வைச்சுருக்கீங்களே!!!???
பூங்கொத்து!
Post a Comment