வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Friday, September 18, 2009

பாகம்-8

அறிவு செறிவாக அன்பு அரிதானால்
வாழ்வு கரிந்து சரிந்திடும்.
___________________________________________________________

அகவை அடியேற அடியிறங்கும் புறஅழகு
அகலாது அழகாகும் அகஅழகு.
___________________________________________________________

மெய் மெலியும் மறைந்திடாது மாறாய்
பொய் பெருத்தாலும் பொசிந்திடும்.
___________________________________________________________

வாழ்வில் வேலையால் நல்வேளையும் வரும்
வேளையால் நல்வேலையும் வரும்.
___________________________________________________________

சோர்ந்த சோம்பேறியுடன் சேர்ந்து செய்தால்
சிறிய செயலும் சிரமமாம்.
___________________________________________________________

உதவிய உதவி உதவாது உய்த்திடும்
உதவியதை ஓயாது உரைத்திட்டால்.
___________________________________________________________

இருப்போர் இல்லாராய் இருந்து வந்தால்
இல்லாதோர் இருப்பவர் ஆவர்.
___________________________________________________________

வாழ்க்கையில் செல்வம் மட்டும் தேடி
வாழ்வை தொலைத்து விடாதே.
___________________________________________________________

வார்த்தையின் வீரியம் வாழவும் வைக்கும்
வரம்புமீறினால் வீழவும் வைக்கும்.
___________________________________________________________

ஈரமில்லா நிலம் உழுதிடவும்- ஈரமில்லா
மனம் பழகிடவும் பயன்படா.
___________________________________________________________

1 comment:

Prapa said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!

Post a Comment