உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட.
__________________________________________________________
தரம் கூட்டும் உரம் தரமில்லையெனில்
உரமிட்டு என்ன பயன்.
__________________________________________________________
பணங்கண்டு குணம் மாறும் உறவு
விளக்கு இல்லா இரவு.
__________________________________________________________
பண்பிடம் பணிவும் பகையிடம் துணிவும்
பலம் தரும் குணமாம்.
__________________________________________________________
மென்மையாய் மொழிவதால் மெய்யென திரிந்து
உயர்ந்து விடாது பொய்.
__________________________________________________________
உன்னை உள்ளூர உணர உள்ளம்
உருகும் உன்னதம் ஊறும்.
__________________________________________________________
உண்டு உண்டிமட்டும் பெருக்கி உழலும்
மனிதரிடம் உண்டோ மதி.
__________________________________________________________
பக்தரின் பக்தி பழுதானால் பரிசுத்த
பகவானை பழுப்பென பழிப்பான்.
__________________________________________________________
பேசி தெரிதலினும் நேசித்து அறிதல்
பிரியா உறவின் வலிவு.
__________________________________________________________
வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை.
2 comments:
நல்ல முயற்சி,தொடரட்டும் உங்கள் பணி.எனக்குப்பிடித்தது >>>>>
வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை. >>>>
வாழ்த்துக்கள்
நன்றி சி.பி.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....
Post a Comment