வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Friday, November 12, 2010

பாகம் -16

ஆணவம் தன்னுள் ஆனந்தத்தை மறைக்க
வெளியே தேடும் மானிடம்.
__________________________________________________________

பழுதாகி புண்பட்டாலும் புரை நீக்கி
பழுதகற்ற பண்படும் மனம்.
__________________________________________________________

நினைத்தது நினைத்தபடி நிலைக்காத போதும்
நிலைப்பது நிகரில்லா நல்லனுபவம்.
__________________________________________________________

திருந்த வைக்கும் அறிவுரை பரிசு
வருந்த வைப்பதோ தரிசு.
__________________________________________________________

நானென்று இருத்தல் என்றும் நலிவு
நாமென்று இருத்தலே வலிவு.
__________________________________________________________

அதிகாரம் ஆளுமை மட்டும் இருக்கும்
இடத்து இருப்பதில்லை அன்பு.
__________________________________________________________

வழிகாட்டல் வற்புறுத்தலிடை வித்யாசம் சிறிது
அதன் வினை பெரிது.
__________________________________________________________

தன்செயல் பிறர் போற்றல் பெருமை
தானே போற்றல் சிறுமை.
__________________________________________________________

சறுக்கல் இல்லா வாழ்வின் சாரம்
சலனம் இல்லா சந்தோஷம்.
__________________________________________________________

நன்மையும் தீதென திரிந்து தெரியும்
வெறுப்போர் செய்தார் எனின்.
__________________________________________________________

4 comments:

Chitra said...

ஒவ்வொன்றும் முத்து தான். அருமையான கருத்துக்கள்!

கிறுக்கன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா madam!!!

சாமக்கோடங்கி said...

//
நன்மையும் தீதென திரிந்து தெரியும்
வெறுப்போர் செய்தார் எனின்.//

சூப்பரப்பு...

கிறுக்கன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாமக்கோடாங்கி!!!!

Post a Comment