சொல்லும் செயலும் கனிவாய் பிறக்க
எல்லாத் துயரும் மரிக்கும்.
__________________________________________________________
அறுஞ்சுவை உணவினும் பெருஞ்சுவை ஆரோக்கியம்
அருளும் நல் நகைச்சுவை.
__________________________________________________________
களைப்பு கபடில்லா உழைப்பின் நிறைவு
கட்டுக் கடங்கா உயர்வு.
__________________________________________________________
ஏற்றத்தில் நண்பன் உனை அறிவான்
இறக்கத்தில் நண்பனை நீயறிவாய்.
__________________________________________________________
செல்லும் சாலை தவறாயின் சீக்கிரம்
சென்று என்ன பயன்.
__________________________________________________________
இல்லாமை இயலாமை இதயத்தில் வளர
சொல்லாமல் வளரும் பொறாமை.
__________________________________________________________
குன்றா குன்றாய் கூடும் குணம்
கொடுத்து காக்கும் கொடை.
__________________________________________________________
நாளும் நெஞ்சில் நஞ்சை நட்டாலும்
நன்மை நவிலும் நற்குணம்.
__________________________________________________________
செய்யும் செயலில் சிரத்தை சீராக
செயலின் சிரமம் சிறிதாகும்.
__________________________________________________________
சோதனையை வினையாய் வேதனையாய் நினையாது
சாதனையாய் புனையும் துணிவு.
2 comments:
நல்லாருக்கு!
தங்கள் வரவுக்கு நன்றி.
Post a Comment