பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
Saturday, January 9, 2010
2012 உலகம் அழியுமா? கிறுக்கனின் பார்வை
2012 உலகம் அழியுமா
அழியாதா அது
எனக்கு தெரியாது
விளக்கங்கள் தந்தாலும்
எனக்கு புரியாது
கிறுக்கனுக்கு தெளியாது
வாதம் வைப்பவர்
இருவகை அதில்
ஒருவகை அழியும் என்பர்
மறுவகை அழியாதென்பர்
அழியும் என்பார்க்கே
அல்லல் அதிகம்
அறிவித்த தேதியில்
அழியவில்லை என்றால்
அவமதிப்பும் அவமானமும்
அன்பாய் சேரும்
அழியாது என்பார்க்கு
அத் தொல்லை இல்லை
அறிவித்த தேதியில்
அழிந்தாலும் கேள்விகள்
எழுப்ப யாரும்
இருக்க போவதில்லை
வாதம் தேவயா
அது நாளை
நடந்தாலென்ன
நானூறாண்டு கழித்து
நடந்தாலென்ன
நாலாயிரம் ஆண்டு
என்று சொன்னாலும்
நாம் அதுவரை
நாட்களை நகர்த்த
இயலுமா...
இன்றோ நாளயோ
என்ற நம்விதியே
நமக்கு தெரியாத
போது உலகின்
விதியை கட்டம்
கட்டி பார்த்தலால்
என்ன பயன்
பிறப்பும் இறப்பும்
இயற்க்கை நியதி
அதில் தனியே
போவதிலும்
சேர்ந்து போதல்
சுகம் தானே
அதிலென்ன சோகம்
பல விடயங்கள்
அறிவு கொண்டு
அறிவது சுகம்
சில விடயங்கள்
கிறுக்கன் போல்
அறியாதிருப்பது
பெரும் சுகம்
சீட்டு விளையாட்டில்
அடுத்து என்ன
சீட்டு என்று
தெரியாது விளையாடலே
சுவாரஸ்யம் தரும்
அது போல்தான்
வாழ்வும் கிறுக்கனின் பார்வையில்....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
suvaiyin paarvaiyilum therivathu athuvey thaanga kirukan avargaley...awesome write up!!!
வெற்றி பெற வாழ்த்துகள்
Post a Comment